சுடச்சுட

  

  ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

  By DIN  |   Published on : 10th January 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், காந்தி மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது.
  இக்கூட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி தலைமை வகித்தார். வர்த்தகப் பிரிவு செயலர் டி.ஆர்.சண்முகம் வரவேற்றார். எம்.ஆறுமுகம், ராமமூர்த்தி, எஸ்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை நீக்க போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். நகரில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டங்களால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதனைத் தவிர்க்க, விரைந்து சாலைகள் அமைக்கப்பட வேண்டும். நகரில் தாராளமாக விற்பனையாகும் லாட்டரி சீட்டுகள் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனைத் தடுக்க அரசு தனி கவனம் செலுத்திட வேண்டும்.
  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் உத்தரவின் பேரில் ரபேல் ஊழல் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும், மாநில அரசின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும் வரும் ஜன. 12-ஆம் தேதி ராசிபுரத்தில் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், நா.குபேர்தாஸ், கு.மா.ப.குமார், ஜெயபால்ராஜ், ஏ.பிரகாசம், எஸ்.எச்.பாபு, செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai