சுடச்சுட

  

  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எருமபட்டி பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
  மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற மூன்று முழக்கங்களை முன் வைத்து,  மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேட்டை மக்களுக்கு எடுத்துச்சொல்ல கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
  இதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட முத்துகாப்பட்டி, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
  மாவட்டப் பொறுப்பாளர் செ. காந்திசெல்வன் தலைமை வகித்தார்.  நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்,  முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமி கூட்டங்களில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பேசினார். மேலும் கிராம மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர், திமுக ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.
  கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலர்கள் கே.பொன்னுசாமி, எஸ்.விமலா சிவக்குமார்,  ஒன்றிய செயலர்கள் பி.பாலு என்ற பாலசுப்ரமணியம், கே.பி.ஜெகநாதன், அ.அசோக்குமார், வி.கே. பழனிவேல், எம்.பி.கெளதம், ச.செந்தில்முருகன், நகரப் பொறுப்பாளர் ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai