சுடச்சுட

    

    பாஜக வாக்கு சாவடி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    By DIN  |   Published on : 11th January 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் நகர பாஜக வாக்கு சாவடி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    நகர பாஜக தலைவர் எஸ். மணிகண்டன் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. மனோகரன் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக வெண்ணந்தூர் ஒன்றியத் தலைவர் மணி, ஸ்ரீதர், சுரேஷ், மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி செயல்பாடு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    ராசிபுரம் நகர பூத் கமிட்டி  பொறுப்பாளர்கள் வி.சேதுராமன், எஸ்.குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என்.தங்கவேல்,  ஆர்.வி.மாதேஸ்வரன், எஸ்.கமல், எல்.யுவராஜா, டி.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai