சுடச்சுட

  

  நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாவை விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
  ஆண்டு தோறும் மார்கழி மாதம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாவை விழா நாமக்கல்லில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் நாமக்கல் முல்லை மஹாலில் பாவை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருப்பாவை மற்றும் திருவெம்பாவை கட்டுரை, ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.
  1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை திருப்பாவையில் 6 முதல் 10 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், திருமால் பெருமை கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன. 
  திருவெம்பாவையில் 11 முதல் 15 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், "மாணிக்கவாசகர் போற்றிய சிவபெருமான்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன.
  6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை திருப்பாவையில் 11 முதல் 20 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், ஆண்டாள் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றன.
  திருவெம்பாவையில் 11 முதல் 20 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், மாணிக்கவாசகர் வாழ்விடவும் வாக்கும் என்ற கட்டுரைப் போட்டியும் நடைபெற்றன.
  9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை திருப்பாவை 1 முதல் 20 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், திருப்பாவை உணர்த்தும் பெண்கள் பெருமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றன.
  திருவெம்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் ஒப்பித்தல் போட்டியும், நாடும், வீடும் நலம்பெற செய்யும் மார்கழி வழிபாடு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றன.
  இதில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு முதல் பரிசாக தலா ரூ. 3,000,  2-ஆம்  பரிசாக தலா ரூ. 2,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  விழா ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர்கள் ரமேஷ், கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். இதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai