பாஜக வாக்கு சாவடி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ராசிபுரம் நகர பாஜக வாக்கு சாவடி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம் நகர பாஜக வாக்கு சாவடி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நகர பாஜக தலைவர் எஸ். மணிகண்டன் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே. மனோகரன் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக வெண்ணந்தூர் ஒன்றியத் தலைவர் மணி, ஸ்ரீதர், சுரேஷ், மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி செயல்பாடு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ராசிபுரம் நகர பூத் கமிட்டி  பொறுப்பாளர்கள் வி.சேதுராமன், எஸ்.குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் என்.தங்கவேல்,  ஆர்.வி.மாதேஸ்வரன், எஸ்.கமல், எல்.யுவராஜா, டி.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com