சுடச்சுட

  

  அரசுப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

  By DIN  |   Published on : 12th January 2019 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம்,பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  பிலிக்கல்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து வேளாண் ஆசிரியர் தங்கவேல், போகிப்பண்டிகையன்று பழைய பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல், காற்று ஆகியவை மாசடைவது குறித்து மாணவ,மாணவியர்களிடையே விளக்கிக் கூறினார். 
  மாலையில் புகையில்லா போகி குறித்து மாணவ,மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம்,பழைய டயர்,டியூப் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க மாட்டோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் ,பொதுமக்களுக்கு துண்டு ப்பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தலைமை தாங்கினார். பேரணியில் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பசுமைப் படை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai