சுடச்சுட

  

  கேஎஸ்ஆர் கல்லூரியில் பொங்கல் பண்டிகையையொட்டி 1800 மாணவிகள் ஜியோ லோகோ வடிவில் நின்று பொங்கல் வைத்து உலக சாதனை படைத்தனர். 
  கே.எஸ்.ஆர் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கேஎஸ்ஆர் கல்வி நிறுவனமும், ஜியோ நிறுவனமும் இணைந்து மாணவிகள் பொங்கல் வைக்கும் யூனிக் உலக சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சாதனையை துவக்கி வைத்தார். இதில் 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று  விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். 
  இதனை யூனிக் உலக சாதனை தலைமை தீர்ப்பாளர் ரஹீமான் கண்காணித்தார். பின்னர் ரஹீமான் கூறும்போது,   யூனிக் உலக சாதனைக்காக 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் யூமென் இமேஜ்யில் ஜியோ லோகோ வடிவில் நின்று அனைவரும் சேர்ந்து மொத்தம் 450 கிலோ பொங்கல் வைத்தனர். இவர்கள் புதிய  உலக சாதனை படைத்துள்ளனர். அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது என்றார்.  நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், மகுடீஸ்வரன், கார்த்திகேயன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai