சுடச்சுட

  

  சத்தான உணவு குறித்து தேசிய அளவிலான போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய அளவிலான சத்தான உணவு என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால், மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் தேசிய அளவிலான, சரியான, சத்தான சரிவிகித உணவு என்னும் மையக்  கருத்தினைக் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள் பங்குபெறும் வகையில், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவியம், சுவரோவியம், டிஜிட்டல் கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன.
  இதில் முதல் கட்டமாக இந்தப் போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் h‌t‌t‌p‌s://‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n/
  ​c‌r‌e​a‌t‌i‌v‌i‌t‌y​c‌h​a‌l‌l‌e‌n‌g‌e என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 
  போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும்.  எனவே, ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் தத்தம் பள்ளிகளின் மூலம் தங்களது பெயரினை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். டிஜிட்டல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை 04286-281242 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai