சுடச்சுட

  

  ஞானமணி கல்வி நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையம், இந்திய பசுமை கட்டட சபை இணைந்து தொழில் முனைவோருக்கான வணிகம் தொடர்பான போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. 
  இதற்கான தொடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார்.  தாளாளர் பி.மாலாலீனா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். 
  தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கண்ணன் வரவேற்றார். கல்வி நிறுவன செயல் அலுவலர் கே.விவேகானந்தன், முதன்மை நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  நாமக்கல் மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவக்குமார்,  வி இன்வென்ட் கேமிலேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணமராஜா, சேலம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொழிலே முனைவு, தொழில் வாய்ப்பு, கடன் நடைமுறைகள் போன்றவை குறித்துப் பேசினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai