சுடச்சுட

  

  பாலிடெக்னிக் வாரிய தேர்வு: எக்ஸல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 12th January 2019 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
  இதில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்
  பெற்றுள்ளனர். 
  இரண்டாம் ஆண்டின் முதல் பருவத் தேர்வு எழுதிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  கம்யூனிகேசன் பொறியியல் துறை மாணவி நிவேதா ராஜேஸ்வரி 700-க்கு 695 மதிப்பெண்களும், குருப்பிரியா 700-க்கு 692 மதிப்பெண்களும், இந்து 700-க்கு 687 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
  இரண்டாம் ஆண்டு மாணவி நிவேதா ராஜேஸ்வரி இரண்டு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், குருப்பிரியா,  இந்து ஆகியோர் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  மேலும் இக் கல்லூரியின் முதலாம் ஆண்டு இ.சி.இ. மாணவர் ஆகாஷ் குமார் ஷா  முதல் பருவத் தேர்வில் 800-க்கு 782 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
  மேலும் இவர் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இக் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் 11 பேர் 15 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் துணைத் தலைவர் என். மதன் கார்த்திக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் சுப்ரமணியன் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai