Enable Javscript for better performance
ராசிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    By DIN  |   Published on : 12th January 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் மெட்ரோ ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் நம்ம போதமலை அறக்கட்டளை இணைந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தின. ஆர். புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
    விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஜேசிஐ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜே.சி. தேவா செங்கோட்டுவேலு தலைமை வகித்தார். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர் தலைமையாசிரியர் ஜாய்சி அன்னம்மாள், ஆசிரியர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர்  டி.பூபதி கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தவிர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. ஜேசிஐ நிர்வாகிகள் பூபதி, நம்ம போதமலை அறக்கட்டளை பொருளாளர் வி.ஆனந்தன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai