பாவை பாலிடெக்னிக் கல்லூரி வாரியத் தேர்வில் மாணவ- மாணவியர் சாதனை

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், கடந்த அக்டோபர் 2018 - ல் நடத்துப்பட்ட வாரியத் தேர்வில்

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், கடந்த அக்டோபர் 2018 - ல் நடத்துப்பட்ட வாரியத் தேர்வில் பாவை பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  
இதில் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி பூமா 700-க்கு 694 மதிப்பெண்களும், செளமியா 693 மதிப்பெண்களும், சுபாஷினி -689 மதிப்பெண்களும், சிவில் துறையைச் சார்ந்த மாணவி ஜனனி ஷாமிலி 700-க்கு 684 மதிப்பெண்களும், இயந்திரவியல் துறை மாணவர் விஷ்ணு 700-க்கு 677 மதிப்பெண்களும் முதலாம் ஆண்டு மாணவர் இளம் சங்கர்  800-க்கு 777 மதிப்பெண்கள் பெற்று கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட மூன்று பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.   20 மாணவ-மாணவியர் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஜந்தாம் பருவத்தில் 95 சதவீத தேர்ச்சியும், எலக்ட்ரிக்கல் துறை பாடங்களில் ஐந்தாம் பருவத்தில் 98 மற்றும் 96 சதவீத தேர்ச்சியும், மூன்றாம் பருவத்தில் 98 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.  இயந்திரவியல் துறை சார்ந்த பாடங்களில் மூன்றாம் பருவத்தில் 94 சதவீத தேர்ச்சியும், ஐந்தாம் பருவத்தில் 88 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். ஆட்டோமொபைல் துறை சார்ந்த பாடங்களில் 91 சதவீத தேர்ச்சியும், கணினி துறை சார்ந்த பாடங்களில் 92 சதவீத தேர்ச்சியும், சிவில் துறை மாணவர்கள் ஐந்தாம் பருவத்தில் பல்வேறு பாடங்களில் 90 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.  
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன்,  இயக்குநர்கள் கே.கே.ராமசாமி, கே.செந்தில், கல்லூரி முதல்வர் சுமதி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com