சுடச்சுட

  

  நல்லிபாளையம் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கக் கோரி சனிக்கிழமை முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  நல்லிபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வளாகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் அப் பகுதி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வயதான முதியோர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் தொகை வழங்க மறுக்கப்பட்டதாம். 
  இதனால் கோரிக்கை மனு தயார் செய்து நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் சனிக்கிழமை மனு கொடுக்கச் சென்றனர். ஆனால் அவர் மனுவை வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்தும், பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கக் கோரியும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  பின்னர் சம்பவத்தைக் கேள்விப்பட்ட திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் வேலு, தனி வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், நேரில் சென்று சம்பந்தப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். தகுதி இருப்பின் பொங்கல் பரிசு பொருட்களும், பரிசுத்தொகையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai