சுடச்சுட

  

  மகளிர் விடுதி, முதியோர் இல்லங்களை உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 13th January 2019 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியாரால் நடத்தப்படும் மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கியுள்ள) மகளிர் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதி மற்றும் தங்கும் இல்லங்கள் சட்டம் 2014-இன் படி முறையாக மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும்.
  இதுநாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத விடுதி மற்றும் இல்லங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்படாத இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai