கல்வியால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைய முடியும்: பெரியார் பல்கலை. துணைவேந்தர் பேச்சு

கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்


கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பி. குழந்தைவேல் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் 40-ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
விழாவுக்குப் பள்ளியின் தலைவர் கே. குமாரசுவாமி தலைமை வகித்துப் பேசினார்.
பள்ளிச் செயலர் எஸ். சந்திரசேகர், இணைச் செயலர் வி. ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் மாவட்ட காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று துவக்கி வைத்துப் பேசினார். ராசிபுரம் டி.எஸ்.பி., ஆர்.விஜயராகவன், பூனா மார்வல் ரியல்டர்ஸ் இயக்குநரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான டி. கார்த்திக் ஆகியோர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி. குழந்தைவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியது:
கல்வியால் மட்டும் உயர்ந்த நிலையை அடையமுடியும். சிறந்த வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதை கல்வியால் மட்டும் அறிந்து கொள்ள முடியும். கற்பது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். படிப்புடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். நன்றாக படிப்பவர்களை விட, சராசரியாக படிப்பவர்களிடம் நல்ல படைப்பாற்றல் திறன் இருக்கும். இதனை உணர வேண்டும் என்றார். 
விழாவில் பள்ளி நிறுவனத் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணன், நிர்வாகிகள் எம்.ராமகிருஷ்ணன், சி.நடராஜ், வி. ராமசாமி, வி.சுந்தரராஜன், வி. பாலகிருஷ்ணன், என். மாணிக்கம் ஆர். பெத்தண்ணன், முதல்வர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, ஜே. சசி ப்ரியா, எம். மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com