சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சார்பில் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை ராசிபுரத்தில் நடந்தது.  ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார்.   மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விநாயகமூர்த்தி வரவேற்றார். 
  மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் பாச்சல்  ஏ.சீனிவாசன்,  ஜி.சுப்பிரமணி,  நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.ஸ்ரீராமுலு முரளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.ராணி,  தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் வயலூர் எஸ்.ராமநாதன்,  இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெ.ஜெனிக்ஸ் ரினோ ஆகியோர் பங்கேற்று,  மத்திய ரஃபேல் விமான ஊழல்,  மாநில அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai