சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகளை நடத்த திமுக முடிவு

  By DIN  |   Published on : 14th January 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்,  சிறுமியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. 
   திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமை வகித்தார்.  மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் கூட்டப் பொருள் குறித்து பேசினார். 
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக்  கொண்டாடுவது.  தைப் பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூர்களில் அனைத்து பகுதிகளிலும் சிறுவர்,  சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி,  பரிசுகள் வழங்குவது. 
   அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் சிறப்பாக நடத்தி மத்திய,  மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேடுகளை எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
   முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி.ராமசுவாமி,  சரஸ்வதி, மாநில நிர்வாகிகள் ப.ராணி,  ரா.நக்கீரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் கே.செல்வம்,  ஒன்றியச் செயலர்கள் கே.பி.ஜெகநாதன்,  ஆர்.எம்.துரைசாமி,  அ.அசோக்குமார், எம்.பி.கெளதம்,  வி.கே.பழனிவேல்,  துரை ராமசாமி,  பி.பாலசுப்ரமணியம், பெ.நவலடி, நகரச் செயலர்கள் என்.ஆர்.சங்கர்,  ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai