சுடச்சுட

  

  வேலூர் மற்றும் பரமத்தியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

  By DIN  |   Published on : 14th January 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் வட்டம் வேலூர் மற்றும் பரமத்தியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து தங்களது பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-1997-ஆம் ஆண்டு பயின்ற மாணவ,மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுடன் பள்ளியில் பயின்ற போது நிகழ்ந்த பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.  22 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டது ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
     இதேபோல் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ,மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவாக கொண்டாடினர்.  இந் நிகழ்ச்சியில்1993-1994-ஆம் ஆண்டு இதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகளும்,  தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளுடன் தங்களது பெற்றோர்கள்,குழந்தைகளுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து பள்ளிப் பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.   குடும்ப விழாவாக குழந்தைகளுடன் கொண்டாடினர்.
      இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai