சுடச்சுட

  

  ராசிபுரம் வி.நகர் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் ஸ்ரீபாலமுருகன் சுவாமி திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.  ராசிபுரம் பழனி பாதயாத்திரை அன்னதானக் குழு சார்பில் 15-ம் ஆண்டாக அன்னதானம் நடந்துவருகிறது.  இதனையடுத்து தை 1-ல் துவங்கி பழனிக்குச் செல்லும் வழியில் அன்னதானம் நடத்தப்படுகிறது.  
  இதனையடுத்து, சனிக்கிழமை ராசிபுரம் வி.நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கும்,  உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் நடைபெற்றது.  பின்னர் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் இருந்து திருவீதி உலா புறப்பட்டு,  ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் சென்றடைந்தது.  இதனையடுத்து,  தை 1-ல் ராசிபுரம்-நாமக்கல் சாலையில் உள்ள சித்தி வினாயகர் கோவிலில் அன்னதானம் நடைபெறும். தை.2-ல் ஈரோடு மாவட்ட அரச்சலூர் பகுதியிலும், தை.3-ல் தாராபுரம் குட்டைக்காடு பகுதியிலும், தை.4-ம் தேதி மேல்கரைப்பட்டி பகுதியிலும்,  தை 5-ல் பழனி நகராட்சிப் பள்ளி அருகிலும் அன்னதானம் நடைபெறும்.
  ஓம் ஸ்ரீஆறுபடை முருகன் திருப்பணிக் குழு:  இதே போல்,  ராசிபுரம் ஓம் ஸ்ரீஆறுபடை முருகன் திருப்பணிக் குழு சார்பில் 7-ம் ஆண்டாக பாத யாத்திரையாக பழனி செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் 7-ம் ஆண்டாக நடத்தப்படுகிறது.  இத் திருப் பணிக் குழு சார்பில் தை 1-ல் ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்குகிறது. 
   தை 2-ல் அரச்சலூர் கொமாரபாளையம் பகுதியிலும் அன்னதானம் வழங்கப்படும் என திருப் பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai