திருச்செங்கோட்டில் கபடி போட்டி

திருச்செங்கோடு தைப்பொங்கல் விழாக் குழு, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம்

திருச்செங்கோடு தைப்பொங்கல் விழாக் குழு, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் அகில இந்திய சூப்பர் ஏ கிரேடு கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கின.
இந்த கபடி போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. பங்குபெறும் அணிகளின் விவரம்: 
ஆண்கள் பிரிவில் மும்பை பாரத் பெட்ரோலியம் நிறுவனம், விஜயா பேங்க் பெங்களூரு, கஸ்டம்ஸ் துறை அணி, பெங்களூரு எம்.இ.ஏ. அணி, பெங்களூரு ரெட் ஆர்மி டெல்லி, எஸ்.எஸ்.பி. போலீஸ் டீம் ஹரியானா, கோவா போலீஸ் அணி, பாண்டிச்சேரி மாநில அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸ் அணி, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப், சென்னை போஸ்டல் அணி, சென்னை வருமான வரித்துறை அணி, ஈரோடு ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஹரியானா பானிபட் அணி, மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போன்ற அணிகள் விளையாடுகின்றன.
பெண்கள் பிரிவில் கொல்கத்தா அசோக் சங்க் அணி, புனே ஸ்போர்ட்ஸ் கிளப், மத்திய ரயில்வே, மும்பை வெஸ்டன் ரயில்வே, மும்பை எஸ்சிஆர் ரயில்வே, ஹைதராபாத், கோவா போலீஸ் அணி, ஸ்ரீ ஓம் ஸ்போர்ட்ஸ் கிளப், புனே பாலம் ஸ்போர்ட்ஸ் கிளப், டெல்லி, உத்தரப் பிரதேச மாநில அணி ஹரியானா போலீஸ் அணி, மாதா பெங்களூரு அணி,  ஹரியானா பானிபட் அணி, ஜேப்பியார் கல்லூரி அணி, சென்னை பி.கே.ஆர். கல்லூரி அணி, கோபி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி போன்ற அணிகள் விளையாடி வருகின்றன. வெள்ளிக்கிழமை வரை போட்டிகள் நடை
பெறும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com