மோகனூரில் ரேக்ளா போட்டி: 12 குதிரைகள் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 12 குதிரைகள் பங்கேற்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 12 குதிரைகள் பங்கேற்றன.
மோகனூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, பொங்கல் விளையாட்டு விழா செவவாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற உள்ளூர் ரேக்ளா குதிரைப் போட்டிக்கு நகரச் செயலர் தங்கமுத்து தலைமை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி போட்டியை தொடக்கி வைத்தார். மோகனூரில் தொடங்கி ராமநாயக்கன்பாளையம் வரை 7 கி.மீ. தொலைவு சென்று வரும் வகையில், போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 12  உள்ளூர் குதிரைகள் பங்கேற்றன.
பள்ளப்பட்டியார் வேலுசாமி குதிரை முதல் பரிசும், மோகனூர் நாவலடியான் கருப்பண்ணசுவாமி குதிரை இரண்டாம் பரிசும், கார்த்திக் குதிரை மூன்றாம் பரிசும் பெற்றன.
வெற்றிபெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.7,500, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.2,500 பரிசு மற்றும் கோப்பையை அமைச்சர் தங்கமணி வழங்கினார். எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஒன்றியச் செயலர் கருப்பண்ணன், முன்னாள் நகரச் செயலர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com