விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நாமக்கல் பூங்காசாலை முன் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மூத்த தலைவர் பி.செங்கோடன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மு.து.செல்வராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சம்பூரணம், சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கே.மோகன், உதவித் தலைவர் எல்.ஜெயக்கொடி ஆகியோர் பேசினர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். 
விவசாய விளைபொருள்களுக்கு வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி விலையைத் தீர்மானிக்க வேண்டும். ஏழை விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு என தனிசட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com