கே.எஸ்.ஆர். தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் பட்டிமன்றம்
By DIN | Published On : 01st July 2019 10:00 AM | Last Updated : 01st July 2019 10:00 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தகவல் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் ஜேசிஐ சங்கம் சார்பில் பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை கல்வி நிறுவன தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி, துணைத் தாளாளர். ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தொடக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் ஜேசிஐ இயக்கத் தலைவர் நந்தகுமார் பட்டிமன்ற நிகழ்வினை ஒருங்கிணைந்தார். ஜேசிஐ இயக்க மண்டல ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேவா செங்கோட்டுவேலு, குமரேசன், கவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற நடுவராக ஜேசிஐ இந்தியா ஆத்தர் அருண்பிரசாத் நிகழ்வை வழிநடத்தினார். ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஆசிரியராகவே இருக்க வேண்டுமா, நட்பாகவும் இருக்க வேண்டுமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக ஈரோடு சித்தார்த்தன், பண்பலை கதை சொல்லி சரிதா, விரிவுரையாளர்கள் ஆத்தூர் திருநாவுக்கரசு, கே.எஸ்.கல்லூரி சரண்யா, தேவேந்திர பிரபு, கருணாமிருதன் ஆகியோர் வாதிட்டனர்.
முடிவில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நட்பாகவும் பழக வேண்டும் என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.