ரோட்டரி மாவட்ட ஆளுநராக எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் பதவியேற்பு

ரோட்டரி மாவட்ட ஆளுநராக எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் பதவியேற்றுக்கொண்டார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநராக எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் பதவியேற்றுக்கொண்டார்.
ரோட்டரி மாவட்ட 2982-இன் புதிய ஆளுநர் மற்றும் டீம் எக்ஸல் நிர்வாகிகள் அண்மையில் பொறுப்பேற்றனர். விழாவுக்கு மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஏ.நிர்மல் பிரகாஷ் தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கே.எஸ்.வெங்கடேசன், ஆளுநர் தேர்வு கே.சுந்தரலிங்கம், என்.அசோகா மற்றும் சேலம் கோவிந்தராஜன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். ரோட்டரியின் முதல் பெண்மணி என்.பார்வதிநடேசன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.     
சர்வதேச ரோட்டரி இயக்குநர் ரோட்டேரியன் சி.பாஸ்கர் கலந்துகொண்டு 2019-20-ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 2982-இன் புதிய ஆளுநர் மற்றும் டீம் எக்ஸல் நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரோட்டரி மாவட்ட ரோட்ராக்ட் சங்கத்தின் பிரதிநிதியாக எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் முகமது ஹர்சனுக்கு சர்வதேச ரோட்டரி இயக்குநர் பாஸ்கர் பதக்கம் அணிவித்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
புதிய ரோட்டரி மாவட்ட ஆளுநராக பதவியேற்ற ரோட்டேரியன் ஏ.கே.நடேசன் பேசுகையில், போலியோவை ஒழிக்க அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து ரூ.ஒரு லட்சம் டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். மேலும், இவ்வாண்டில் எங்கள் முக்கிய இலக்குகளாக நூறு புதிய ரோட்ராக்ட் சங்கங்கள், நூறு புதிய இன்ட்ராக்ட் சங்கங்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட நூறு ஹாப்பி ஸ்கூல்ஸ் ஆகியற்றை செயல்படுத்துவது என்றார்.
விழாவில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள், மாவட்ட ரோட்டரி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com