மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

திருச்செங்கோடு  தாலூகா மல்லசமுத்திரம் வட்டாரம்,  கோட்டப்பாளையம் கிராமத்தில் மக்காச்சோளம்

திருச்செங்கோடு  தாலூகா மல்லசமுத்திரம் வட்டாரம்,  கோட்டப்பாளையம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை
நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை வகித்து, மக்காச்சோளம் படைப்புழு தாக்குதல் அறிகுறிகளான  இலையின் ஓரங்களில் வெட்டப்பட்டு கடித்து உண்ணுதல்,  இரவு நேரங்களில் அதிகமாக உண்ணுதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கிக் கூறினார். இப்படைப்புழு தாக்குதலைக் கட்டுபடுத்த உழவு செய்தல்,  ஒரே சமயத்தில் விதைத்தல், விதை நேர்த்தி செய்தல், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு,  தட்டைபயறு மற்றும் வரப்புப் பயிராக சூரியகாந்தி, சாமந்திப்பூ,  எள் ஆகியவற்றை சாகுபடி செய்தல் மூலமும் இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். மேலும், வேப்ப எண்ணெய் கரைசல் விதைத்த பத்தாவது நாளில் தெளித்து தாய் அந்துப் பூச்சிகள் பயிரின் மீது முட்டை இடுதலைத் தவிர்க்கலாம். இறுதியாகப் படைப்புழு தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் தென்பட்டால்  குளோர் ஆண்ட்ரி ரில்ப்ரோல்  1 லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் தெளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை தெளிவாகக் விளக்கிக் கூறினார். மேலும் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் மழைத்தூவன், தெளிப்புநீர்ப் பாசன மானிய விவரங்கள் பற்றியும் அவர் விளக்கிக் கூறினார். துணை வேளாண்மை அலுவலர் ராமசாமி, நுண்ணீர்ப் பாசன திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் பற்றியும்,  பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றியும் விளக்கிக் கூறினார். நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான ரிவளிவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அசோகன் நுண்ணீர்ப் பாசன வயல்களில் அமைப்பது பற்றி கூறினார். இவ்விழிப்புணர்வுக் கூட்டத்தில் எராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மோகன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com