சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வெங்கமேட்டில்  உள்ள  மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை சரிவடைந்துள்ளது.
    பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. 
    கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 11,717 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. 
    இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.86.65-க்கும்,  குறைந்த பட்சமாக ரூ.81.99-க்கும், சராசரியாக ரூ.85.59-க்கும்  ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 28 ஆயிரத்து 759-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெற்ற ஏலத்துக்கு 10,383 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.86.07-க்கும், குறைந்த பட்சமாக ரூ.80.07-க்கும், சராசரியாக ரூ.84.60-க்கும்  ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 452 - க்கு வர்த்தகம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai