சுடச்சுட

  

  சேந்தமங்கலம் ஸ்ரீதத்தாஸ்ரமத்தில் குரு பூர்ணிமா விழா: நாளை நடக்கிறது

  By DIN  |   Published on : 14th July 2019 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஸ்ரீதத்தாஸ்ரமத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 15) குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.
  இதுகுறித்து,  ஸ்ரீ மகா மேரு மண்டலி நிர்வாக அறங்காவலர் நா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: குரு பூர்ணிமா விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ அபயானந்த ப்ரஹமேந்திர சரஸ்வதி சுவாமி, உலக நன்மைக்காக ஆன்மிக முறையில் பல்வேறு செயல்களை செய்து வந்தார்.  
  அவரின் வழிவந்த ஸ்ரீ மதுராம்பிகானந்த ப்ரஹமேந்திர சரஸ்வதி சுவாமி, சென்னையில் ஸ்ரீ மகா மேரு மண்டலி என்ற அமைப்பினை உருவாக்கி ஆன்மிக தொண்டாற்றி வருகிறார். அவரின் குருமார்களைப் போற்றி வழிபடும் வகையில் 15, 16 தேதிகளில் நாமக்கல் மாவட்டம், ஸ்ரீ தத்தகிரி ஸ்ரீ தத்தாஸ்ரமம் மற்றும் பச்சுடையாம்பட்டி அருணாஸ்ரமத்தில் குரு பூர்ணிமா விழா நடைபெறுகிறது.  இவ்விழாவில் ஸ்ரீ மதுராம்பிகானந்த ப்ரஹமேந்திர சரஸ்வதி சுவாமி முன்னிலை வகிக்கிறார். இரு நாள்களும் காலை, மாலை வேளைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai