சுடச்சுட

    

    பா.ஜ.க.வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th July 2019 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    கர்நாடகம் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிப்பதாக புகார் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால் தலைமை வகித்தார்.திருச்செங்கோடு நகரத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai