சுடச்சுட

  


  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு,  ரூ.4.25-ஆக சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.
  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல விலை நிர்ணயக் குழுக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக முட்டை விலை மற்றும் விற்பனையானது சரிவைச் சந்தித்து வருகிறது.  இதனால், பிற மண்டலங்களில் விலை உயர்வு என்பது இல்லை. எந்த மண்டலத்திலும் விற்பனை பெருமளவில் இல்லாததால்,  விலையில் மாற்றம் செய்யலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பிற மண்டலங்களில் விலை குறைக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையைக் குறைக்க  முடிவு செய்யப்பட்டது. 
  அதனைத் தொடர்ந்து,  மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு,  ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.  சென்னை மண்டலத்திலும் 20 காசுகள் சரிந்து ரூ.4.35-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்):ஹைதராபாத்-395, விஜயவாடா-408, பார்வாலா-353, மைசூரு-440, ஹோஸ்பெட்-400, மும்பை-470, பெங்களூரு-435, கொல்கத்தா-453, தில்லி-385.
  இதேபோல்,   பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை  கிலோ ரூ.65-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.72-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai