ராசிபுரம் கல்வி நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ராசிபுரம் கல்வி நகர் ரோட்டரி சங்கப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. 


ராசிபுரம் கல்வி நகர் ரோட்டரி சங்கப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. 
கல்வி நகர் ரோட்டரி சங்கத்தின் 2019-20-ஆம் ஆண்டுக்கான தலைவராக கு.பாரதி, செயலராக ஆர்.சபரீஸ்குமார், பொருளாளராக கே.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பொறுப்பேற்பு விழாவில்,  முன்னாள் தலைவர் வி.எஸ்.செந்தில்குமார் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். கு.பாரதி ஆண்டறிக்கை வாசித்தார். ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் எஸ்.சத்தியமூர்த்தி புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். மாவட்ட ரோட்டரி அறக்கட்டளை தலைவர் பாபு, ராசிபுரம் ரோட்டரி கிளப் தலைவர் ஏ.ரவி, முன்னாள் தலைவர்கள் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலாஜி, எல்.சிவக்குமார், எஸ்.பிரகாஷ், எம்.ராமகிருஷ்ணன், எஸ்.கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
விழாவில் கட்டட தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் போன்றவை
வழங்கப்பட்டன. 
நாமகிரிப்பேட்டை அரிமா சங்கம்:  இதேபோல், நாமகிரிப்பேட்டை மஞ்சள் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவராக மா.விஸ்வநாதன், செயலாளர்களாக செந்தில் (நிர்வாகம்), பிரபு (சேவை), பொருளாளராக தனசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பொறுப்பேற்பு விழாவில் அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பி.சந்திரசேகரன், பி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து பதவியேற்பு விழாவை நடத்தி வைத்தனர். 
இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் இ.கே.பொன்னுசாமி, அரிமா மண்டலத் தலைவர்கள் ராஜாராம், ம.பெரியசாமி, உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com