Enable Javscript for better performance
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலகக் கட்டடங்கள்: அமைச்சர்.பி.தங்கமணி திறந்து வைத்தார- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலகக் கட்டடங்கள்: அமைச்சர்.பி.தங்கமணி திறந்து வைத்தார்

    By DIN  |   Published On : 15th July 2019 09:51 AM  |   Last Updated : 15th July 2019 09:51 AM  |  அ+அ அ-  |  

    திருச்செங்கோடு வட்டம், செண்பகமாதேவி,  கோழிக்கால் நத்தம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலகக் கட்டடங்களை சனிக்கிழமை மின்சாரத் துறை அமைச்சர். பி.தங்கமணி  திறந்து வைத்தார்.
    விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்  தலைமையில்,  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றன.  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.பி.தங்கமணி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் புதிய நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். 
    திருச்செங்கோடு வட்டம்,  செண்பகமாதேவி ஊராட்சியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடத்தையும், கோழிக்கால் நத்தம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார். 
    இந் நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி பேசுகையில் தெரிவித்ததாவது, 
    கூட்டுறவு சங்கங்கள் கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  கிராமப்புற மக்கள் வங்கிச் சேவைக்காக நகரங்களைத் தேடிச் செல்லாமல் இருக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கக் கட்டடங்களைப் புதுப்பித்து நவீனமயமாக்கம் செய்து வருகின்றது.  தனியார் வங்கிகளுக்கு இணையாக குளிரூட்டப்பட்ட வசதி இருக்கைகள்,  பாதுகாப்புப் பெட்டக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றது.  
    கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்,  மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பொருளாதார கடனுதவி ஆகியவை வழங்கப்படுகின்றன.  மேலும்,  தங்க நகைக் கடன் வழங்கப்படுகின்றது.  வங்கிச் சேவைகள் பொதுமக்களின் தேவைக்கேற்ப எளிமையாகச் செய்து தருவது கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே எனத் தெரிவித்தார்.
    இந் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கோட்டாட்சியர்  ப.மணிராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன்,  நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர்.ராஜேந்திரன்,  மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார்,  திருச்செங்கோடு துணைப் பதிவாளர்   வெங்கடாசலம், கோழிக்கால் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ராஜமாணிக்கம்,  செண்பகமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க செயலாளர் சங்கர், பாலப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திருக்குமரன்,  திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேல் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp