சுடச்சுட

  

  நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
  இது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்,  மாவட்ட கட்சி அலுவலகத்தில், வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, அவைத் தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  இதேபோல்,  கிழக்கு மாவட்ட மகளிர் அணி அறிமுக ஆலோசனைக் கூட்டம்,  செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்  தலைமையில் நடைபெற உள்ளது.  இதில்,  ஒன்றிய,  நகர, பேரூர் அளவிலான மகளிர் அணியின் அமைப்பாளர்கள் மற்றும்  துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai