மின்கம்பம் விழுந்து கார் சேதம்
By DIN | Published On : 19th July 2019 02:03 AM | Last Updated : 19th July 2019 02:03 AM | அ+அ அ- |

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவில் இருந்த மின்கம்பமானது லாரி மோதி சாய்ந்தது. இதில், கார் சேதம் அடைந்தது.
ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கச்சேரி ரோடு பகுதியில், சாலையின் நடுவில் தடுப்புச் சுவரில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பங்கள் நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அந்த வழியாக வைக்கோல் போர் ஏற்றிய மினிலாரி புதுப்பாளையத்தை நோக்கிச் சென்றது. இந்த லாரி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தனியார் கேபிளில் வைக்கோல் போர் சிக்கி, மின்கம்பம் சாய்ந்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டகார் மீது விழுந்தது.
அந்த வழியே சென்றவர்கள் இதனால் அலறி ஓடினர்.
இருப்பினும், விபத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை.