நீர் மேலாண்மை ஓவியப் போட்டி

நாமக்கல்  டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர்  செஞ்சிலுவைச் சங்கத்தினர்  "தண்ணீர் சிக்கனம்

நாமக்கல்  டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் இளைஞர்  செஞ்சிலுவைச் சங்கத்தினர்  "தண்ணீர் சிக்கனம்,  தேவை இக்கணம்'  மற்றும்  "தமிழர்களின் பாரம்பரிய நீர் மேலாண்மை'  ஆகிய தலைப்புகளில் நீர் மேலாண்மை பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டியை அண்மையில் நடத்தினர்.
கல்லூரித் தலைவர் பி. கே. செங்கோடன் தலைமை வகித்தார்.  செயலர் கே. நல்லுசாமி முன்னிலை வகித்தார்.  முதல்வர்
எம். ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்றார்.  இயக்குநர் -  கல்வி அரசு பரமேசுவரன், வேலைவாய்ப்பு இயக்குநர் கே.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நீரின்று  அமையாது உலகு,  மழை நீரைச் சேமிப்போம், நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுப்போம், நதிநீர் இணைப்பை  மேற்கொள்வோம், மரம் வளர்ப்போம், மழைபெறுவோம் ஆகிய கருப்பொருட்களில் மாணவியரால்  பல்வேறு விதமான ஓவியங்கள் வரையப்பட்டன.   இப் போட்டிகளில் முதல் பரிசை வீ.கல்பனா,  எம்.பேபி, எஸ்.பூரணி ஆகியோரும்,  2-ஆம் பரிசை எஸ்.பிரியதர்ஷினி,  டி.பிரீத்தா, எம்.அபிநயா ஆகியோரும், 3-ஆம் பரிசை ஆர்.திவ்யா, பி.கமலி, எஸ்.தீபா ஆகியோரும் பெற்றனர்.  இப்போட்டிகளில் கலந்து கொண்ட 76 மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டிரினிடி  அகாதெமி தலைவர் ஆர். குழந்தைவேல்,  செயலர் டி. சந்திரசேகரன்  ஆகியோர் போட்டியில் பங்கேற்ற மாணவியரை வாழ்த்தினர். போட்டி நிறைவில் நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியைகள் என்.இளமதி, ஆர்.நவமணி  மற்றும் ஆர்.சாவித்திரி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com