மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு
By DIN | Published On : 24th July 2019 09:48 AM | Last Updated : 24th July 2019 09:48 AM | அ+அ அ- |

மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.1000 வரை விலை சரிவு அடைந்துள்ளது.
பரமத்தி வேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்தக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிழங்கு ஆலையில் ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. இதுதவிர, சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது, டன் ரூ.1000 வரை விலை சரிவடைந்து ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.