Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.
     ஈரோடு மாவட்டம், சோமூர் அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (32). இவர் செவ்வாய்க்கிழமை தனது மனைவி வெண்ணிலாவுடன் (27) ஜேடர்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் இரவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் சோழசிராமணி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும், பாலசுப்ரமணி சென்ற இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பாலசுப்ரமணியின் மனைவி வெண்ணிலா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பாலசுப்ரமணியும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளியைச் சேர்ந்த பாலசுப்ரமணி (47) என்பவரும் படுகாயம் அடைந்து திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai