Enable Javscript for better performance
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 142 பேர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் அருகே உள்ள கபிலர்மலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வேலையில்லாத பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     இந்த வேலைவாய்ப்பு முகாம் கபிலர்மலை வட்டார சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. முகாமைத் திட்ட இயக்குநர் மணி தொடக்கிவைத்தார். கபிலர்மலை வட்டாரத்தைச் சார்ந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வறுமையை ஒழிக்கும் நோக்கிலும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இம்முகாமை மாவட்டந்தோறும் வட்டார அளவில் நடத்தி வருகிறது. இந்த முகாமில், ஜவுளி, உலோகம் பற்றவைத்தல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், இயந்திரம் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக 15 - க்கும் மேற்பட்ட சென்னை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இம் முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் 359 பேர் கலந்து கொண்டனர். இதில் தங்களது சுய விவரத்தை அளித்தனர். அதே போல இம்முகாமில் 15 முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 142 பேரை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) உதவி இயக்குநர்கள் மாலதி, சர்மிளா, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கெளசல்ய யோஜனா திட்ட மண்டல மேலாளர் பூபதி ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai