Enable Javscript for better performance
கல்வி அலுவலகத்தில் விஷமருந்தை தின்ற இளநிலை உதவியாளர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்வி அலுவலகத்தில் விஷமருந்தை தின்ற இளநிலை உதவியாளர் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில் விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்ற இளநிலை உதவியாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
     நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த பிள்ளாநத்தம், செட்டியாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரின் மகன் மோகன்ராம் (26). திருமணமாகாத இவர், கடந்த பிப்ரவரி மாதம் திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மடிக்கணினிகள் மற்றும் சைக்கிள்கள் வழங்குவதற்கான பணிகள் மற்றும் பள்ளி கல்வித் துறையின் வழக்கமான பணிகளை அவர் கவனித்து வந்துள்ளார். மேலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டம் தனியாக பிரிந்த நிலையிலும், நாமக்கல் கல்வி மாவட்ட பணிகளையும் ஆள் பற்றாக்குறையால் இவர் ஒருவரே கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை பணியில் இருந்த போது எலிகளைக் கொல்லப்பயன்படும் மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த மோகன்ராமை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மோகன்ராம் புதன்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai