Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி  

    By  நாமக்கல் / பரமத்தி வேலூர்,  |   Published on : 25th July 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
     நாமக்கல் குளிர்சாதன கருவிகள் பழுதுபார்ப்போர் நலச் சங்கம் சார்பில், தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு கொடியசைத்து தொடக்கி வைத்தார். அச்சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். 50 - க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில், தலைக் கவசம் அணிந்தபடி நூற்றுக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இப் பேரணியானது, நாமக்கல் தெற்குப் பள்ளியில் தொடங்கி, மோகனூர் சாலை, அண்ணா சிலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, கடைவீதி சாலை வழியாக பூங்கா சாலையை வந்தடைந்தது.
     பரமத்தி வேலூரில்...
     நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் விபத்தில்லா நாள் கடைப்பிடிப்பது குறித்து, பரமத்தி வேலூரில் கல்லூரி மாணவர்களின் செயல் விளக்கம் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரிடையே புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர,அருளரசு உத்தரவின்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் விபத்தில்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமை பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையில், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் மூலம் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக் கவசம் அணிந்து செல்வதால் ஏற்படும் உயிர் பாதுகாப்பு, தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் அபாயம் குறித்து செயல்முறை விளக்கம் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், விபத்துக் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவைகளால் ஏற்படும் பின் விளைவுகள், அபராத தொகை குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. செயல் விளக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தங்கராஜ், பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன் மற்றும் போலீஸார் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai