Enable Javscript for better performance
தேய்பிறை அஷ்டமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பைரவர் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன், கபிலர்மலை சிவபுரம் சிவாலயம் உள்ளிட்ட கோயில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நெய், சுரைக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai