Enable Javscript for better performance
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணியிட மாற்றம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலர்கள் 20 - க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
     நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 168 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலர்களாக உள்ளவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என சங்கச் செயலாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை இணை இயக்குநர், சங்க செயலாளர்கள் பலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை 20 - க்கும் மேற்பட்ட சங்க செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், படிப்படியாக பலர் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai