Enable Javscript for better performance
தொழில் முனைவோருக்கு நிதி மேலாண்மை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில், மகளிர் தொழில் முனைவோருக்கு நிதி மேலாண்மை குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
     தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், மாவட்ட தொழில் மையம், நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில், மகளிர் தொழில் முனைவோருக்கான நிதி மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜூ தலைமை வகித்தார். தொழில் முனைவோர் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் மதியழகன், மாவட்ட சிறு, குறு தொழிற் சங்கத் துணைத்தலைவர் அருள், செயலாளர் சண்முகம், தொழில் முனைவோர் ஆலோசகர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில், மகளிர் தொழில்முனைவோருக்கு, பல்வேறு தொழில் திட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியானது தொழில்களை மேம்படுத்த உதவியாகவும், எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்குரிய சிறந்த வழிகாட்டியாக அமைந்தது என அதில் பங்கேற்ற மகளிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai