Enable Javscript for better performance
பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாயம் செய்தல் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாயம் செய்தல் கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில், பருவநிலை மாற்றத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது தொடர்பான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
     நபார்டு மற்றும் ஹீல்ஸ் நிறுவனம் சார்பில், பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோவை ஹீல்ஸ் நிறுவன தலைவர் ராதா தாமோதரம் வரவேற்றார். நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் எஸ்.கே.தினேஷ் முன்னிலை வகித்தார். மோகனூர் ஹீல்ஸ் நிறுவன செயலாளர் எம்.எஸ்.ஏ.சதீஷ்பாபு தொடக்க உரையாற்றினார்.
     இந்தக் கருத்தரங்கில், குடிநீர் பற்றாக்குறை, விவசாயத்துக்கு நீராதாரம் குறைதல், மழை குறைவாக பெய்வது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். 2030-ஆம் ஆண்டில் இவற்றின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என புவியியல் வல்லுநர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பருவநிலை மாற்றம் இவ்வாறு தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்பது கேள்விக்குறியாகி விடும். இது அரசின் கடமை மட்டுமல்ல, தனி மனித விவசாயியின் கடமையும் கூட. பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயப் பணிகளை செய்ய வேண்டும். முக்கியமாக பெண் விவசாயிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டுவது அவசியம். இது தொடர்பான கருத்தை அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக நீர் மேலாண்மை பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ அமைப்பினர் இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கால்நடை வளர்ப்பும், பயிரிடுதலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கும். இயற்கை வழி உரங்கள், பூச்சி விரட்டிகள் போன்வற்றை பயன்படுத்தும்போது பருவநிலை பாதிப்பு குறைபாடுகளை களைய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
     இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.முத்தரசு, வேளாண் அறிவயில் நிலையத் தலைவர் என்.அகிலா, கால்நடை உற்பத்தி மேலாண் துறை பேராசிரியர் வி.ரமேஷ், ஹீல்ஸ் நிறுவன முதன்மை ஒருங்கிணைப்பாளர் டி.பிரபாகரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai