Enable Javscript for better performance
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராசிபுரம் வேளாண்மை துறை உதவி இயக்குநர் அ.நாச்சிமுத்து தெரிவித்துள்ளார்.
     இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
     ராசிபுரம் வட்டாரத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஓராண்டாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த வருடம் இப்புழு தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
     அதன் ஒரு பகுதியாக முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் பூச்சிநோய் கண்காணிப்புத் திடல் அமைக்கப்பட்டு விதை நேர்த்தி, கோடை உழவு, அடி உழவில் வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 100 இடுதல், அசார்டிராக்டின் 1 மூடி தெளித்தல், இனக் கவர்ச்சி வைத்தல் போன்ற தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை அண்மையில் இத் திடல் வேளாண்மை துணை இயக்குநர் ஷோபா ஆய்வு செய்து அங்கு கூடியிருந்த கிராம விவசாயிகளிடம் மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கிக் கூறினார். இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர், வேளாண்மை துணை இயக்குநர் து.ராஜகோபால், பெ.அசோகன், வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நோய் கட்டுப்பாடு குறித்து விளக்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai