Enable Javscript for better performance
வருமான வரி தின விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    159 ஆவது வருமான வரி தினத்தையொட்டி திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பாக விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
     திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை வருமான வரித்துறை அலுவலர் கமலக்கண்ணன் தொடக்கி வைத்தார். பேரணியில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
     இப் பேரணியின் போது வரிக் கட்டுவதன் அவசியம், நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரியின் பயன்பாடு, ஜி.எஸ்.டி. வரி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பேரணி பழைய பேருந்து நிலையம், வடக்கு ரதவீதி, தெற்கு ரத வீதி வழியாகச் சென்று வருமான வரித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது.
     பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வருமான வரித்துறையினர் மரக் கன்றுகளை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai