Enable Javscript for better performance
வித்யாநிகேதன் பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் வித்யாநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு விழா, இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா, பசுமைப் படை தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவர் சி.சுந்தரராஜூ தலைமை வகித்தார். செயலர் ஆர்.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். பள்ளி பொருளாளர் ஆர்.கணேசன், இயக்குநர் எஸ்.பிரகாஷ், முதல்வர் பி.ஸ்ரீபிரவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்வில், ராசிபுரம் நகராட்சி ஆணையர் மா.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நீர் மேலாண்மை இயக்கம், மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, டெங்கு கொசு ஒழிப்பு போன்றவை குறித்து மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்ட்ராக்ட் கிளப் தொடங்கப்பட்டு மாணவ பிரதிநிதிகள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். இதில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.ரவி, செயலர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், பொருளாளர் ஜி.தினகர் ஆகியோர் பங்கேற்று ரோட்ராக்ட் கிளப்பை தொடக்கி வைத்துப் பேசினர்.
     மேலும், பசுமைப் படை தொடங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மாணவர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் திரளான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai