முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தடகளப் போட்டி: பரமத்தி மலர் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 30th July 2019 09:35 AM | Last Updated : 30th July 2019 09:35 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி மலர் பள்ளி மாணவர்கள் இரண்டாவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம்,, அமிர்தசரஸில் உள்ள குருநானக் விளையாட்டு மைதானத்தில், இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் அன்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
இதில், பரமத்தி மலர் மெட்ரிக். பள்ளி பிளஸ் 2 வகுப்பு மாணவர் ஜெயசூர்யா 18 வயதுக்குள்பட்ட பிரிவில் 400 மீ. மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதே வகுப்பில் பயிலும் மாணவர் அச்சுதன் 200 மீ. மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 17 வயதுக்குள்பட்ட பிரிவில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சக்ரவர்த்தி எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
தேசிய தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் குணசேகரன், செந்தில்குமார் ஆகியோரையும் பள்ளியின் தலைவர் பழனியப்பன், துணைத் தலைவர் இராஜேந்திரன், செயலர் கந்தசாமி, துணைச் செயலர் தமிழ்ச்செல்வி, பொருளாளர் வெங்கடாசலம், பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர் உஷாகுமாரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.