முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
60 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
By DIN | Published On : 30th July 2019 09:34 AM | Last Updated : 30th July 2019 09:34 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே 60 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் வரகுரில், 1956-ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில், 1956-இல் பத்தாம் வகுப்பு முடித்த 20 பேரும் 1959-இல் சந்தித்து கொண்டனர். அதன்பின் 2004-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை அவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அவர்களில் தற்போது 12 பேர் மட்டுமே உள்ளனர். 8 பேர் காலமாகி விட்டனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், என்.ஜனகராஜ், வி.தாமோதரன், பி.ஜனார்த்தனம், எம்.சக்தி, சபா.சுப்பையன் ஆகிய 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அவர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஐந்து பேரும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். தொடர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு நுழைவாயிலை தங்களது சொந்த செலவில் அமைத்து கொடுப்பதென முடிவு செய்தனர்.
இந்க நிகழ்வில் அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.