Enable Javscript for better performance
வழக்குரைஞரிடம் தகராறு: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞரிடம் தகராறு: 4 பேர் கைது

    By DIN  |   Published on : 01st June 2019 10:35 AM  |   அ+அ அ-   |    |  

    ராசிபுரத்தில்  வழக்குரைஞரிடம்  தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக  நான்கு பேரை ராசிபுரம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
    ராசிபுரம்  காவல்நிலையம் அருகே தட்டச்சு,  நகலகம் கடை நடத்தி வருபவர் கோபால். இவரது கடை முன் சிலர் காரை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, காரைத் தள்ளி நிறுத்துமாறு கோபால் கூறியுள்ளார். இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும், கோபாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  கோபால், அருகில் உள்ள வழக்குரைஞர் நல்வினைவிஸ்வராஜ் அலுவலகத்துக்கு சென்று தஞ்சமடைந்தார். அங்கேயும் கோபாலை பின்தொடர்ந்து சென்ற காரில் வந்த கும்பல், வழக்குரைஞரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், வழக்குரைஞர் நல்வினை விஸ்வராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக்
    கூறப்படுகிறது. 
    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினராம். காரில் வந்தவர்கள் நண்பர்கள் என்பதால் ராசிபுரம் போக்குவரத்துக் காவல் பிரிவில் பணியாற்றும் சதீஷ்குமார் என்ற காவலரும் அவர்களுக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
    மேலும் வழக்குரைஞர் அலுவலக கண்ணாடிகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து நல்வினைவிஸ்வராஜ் ராசிபுரம் காவல்நிலையத்தில் ஆறு பேர் மீதும் புகார் அளித்தார். இதன் பேரில்  ராசிபுரம் போக்குவரத்துக் காவலர் சதீஷ்குமார், (35), காக்காவேரி, பச்சபாலிகாட்டைச் சேர்ந்த, ஏசி மெக்கானிக் விவேக், (29), மரப்பரையைச் சேர்ந்த, ரிக் வண்டி மேலாளர் ஜெயக்குமார் (33), மருந்துக் கடை உரிமையாளர் ராஜா (36), மரப்பரை குப்புச்சிபாளையம் கூலித் தொழிலாளி முத்துகுமார் (38)  உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான போக்குவரத்துக் காவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp