அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி  புதுச்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்றது.

தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி  புதுச்சத்திரம் ஒன்றியத்தில் நடைபெற்றது.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நவணி ஊராட்சியில் உள்ள வாணக்காரன்புதூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். 
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோர்  மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com